25 சண்டை கோழிகள் திருட்டு

ஆவடி: திருமுல்லைவாயல் எட்டியம்மன் நகர் சீனிவாச பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(55). இவரது வீட்டின் அருகில் ஷெட் அமைத்து சண்டை கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் கோழிக்கு தீவனம் போட்டுவிட்டு தூங்க சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது செட்டில் இருந்த 25 சண்டை கோழிகளை காணவில்லை. நள்ளிரவில் மர்ம நபர்கள் கோழிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.

Related Stories:

>