பாஜவில் அமைச்சராகியுள்ள மாற்று கட்சியினரின் பதவியை 6 மாதத்தில் திரும்பபெற மேலிடம் முடிவு: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆருடம்

பெங்களூரு: பா.ஜ.வில் சேர்ந்து அமைச்சர் பதவியில் உள்ள மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களின் பதவியை விரைவில் பறித்துக்கொள்ள பா.ஜ. மேலிடம் முடிவு செய்துள்ளது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எம். லட்சுமன் தெரிவித்தார்.

 மைசூருவில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.வில் இணைந்தனர். இதில் சிலருக்கு தற்போது அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பதவிகளை 6 மாதங்களுக்குள் அவர்களிடமிருந்து பறிக்க பா.ஜ. மேலிடம் முடிவு செய்துள்ளது. அதேபோல் சுதாகர், நாராயணகவுடா, கோபாலய்யா, ஆர்.சங்கர், பி.சி.பாட்டீல் ஆகியோரின் பதவிகள் விரைவில் பறிக்கப்படும். தற்போது பா.ஜவினருக்கு வெளி ஆட்களின் ஆதரவு தேவையில்லை.

மாநில அரசு பலமாகவுள்ளது. கட்சியை விட்டு வெளியே சென்றவர்களின் நிலைமை தான் மோசமாகும். முன்னாள் முதல்வர் சித்தராமையா குருபர் சமூகத்திலிருந்து விலக்கப்படுவார் என்று மேலவை உறுப்பினர் எச். விஷ்வநாத் தெரிவித்துள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சேர்ந்து சித்தராமையாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். சித்தராமையா ஒரு சமூகத்துக்கு சொந்தமானவர் கிடையாது. இதனால் எச். விஷ்வநாத் தெரிவித்துள்ள கருத்தை திரும்ப பெற வேண்டும்’’ என்றார்.

Related Stories: