சீர்காலி கடைவீதியில் மருத்துவ குணம் கொண்ட செவ்வாழை பழம் விற்பனை

சீர்காழி : சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனைக்காக சத்தியமங்கலத்திலிருந்து செவ்வாழை பழம் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

லாரிகளில் எடுத்து வரப்படும் செவ்வாழை தார்களை வியாபாரிகள் வந்து வாங்கி சென்று தங்களது கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு பழ கடைகளிலும் செவ்வாழை பழம் குவியல் குவியலாக விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன ஒரு செவ்வாழை பழம் ரூ.10 முதல் ரூ 12 வரை விற்பனை செய்யப்படுகிறது. செவ்வாழை அதிக மருத்துவ குணம் கொண்டதாகும். அமெரிக்காவை தாயகமாக கொண்டுள்ள இப்பழத்தில் பீட்டா கரோட்டீன் அதிகளவில் உள்ளதால் கண் நோய்களை குணமாக்கும் பொட்டாசியம் அதிகமாக உள்ளது.

சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். 21 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். தினசரி ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி குணமாகும். நரம்பு மண்டலம் பலம் பெறும் தொற்று நோய் கிருமிகளை கொல்லும் சக்தி செவ்வாழைப்பழத்தில் அதிகளவில் உள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் செவ்வாழைப் பழத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Related Stories: