நிதி மோசடி தொடர்பாக சிரோன்மணி தலைவர் மீது வழக்கு

புதுடெல்லி: டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், டெல்லி சிரோன்மணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சித் தலைவரும் மற்றும் டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழு தலைவருமான மன்ஜிரேந்தர் சிங் சிர்சா என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘டெல்லி குருத்வாரா நிதி மோசடி ெதாடர்பாக வடக்கு அவென்யூ காவல் நிலையத்தில் எஸ்ஏடி கட்சியின் டெல்லி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பூபிந்தர் சிங் என்பவர் கட்சித் தலைவர் மன்ஜிரேந்தர் மீது புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட மன்ஜிரேந்தர் இல்லாத நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்கி நிதி மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும், பக்தர்கள் அளித்த பொது நன்கொடையிலும் முறைேகடு செய்துள்ளார். அதனால் அவர் மீது சிஆர்பிசியின் பிரிவு -154 இன் கீழ் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்’ என்றனர்.

Related Stories:

>