26ம்தேதி குடியரசு தின விழா கொண்டாட்டம் பெரம்பலூர் விளையாட்டு மைதானம் தூய்மைப்படுத்தும் பணி மும்முரம்

பெரம்பலூர்:வருகிற 26ம்தேதி குடியரசு தின விழா. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானம் தூய்மைப் படுத்தும் பணிகள் தொடங்கியது.பெரம்பலூர் மாவட்டவிளை யாட்டு மைதானத்தில் நாட் டின் குடியரசு தின விழா வரும் 26ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாட ப்பட உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச்ச 25ம் தேதி முதல் கொரோ னா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்னமும் முழுமையாக விளங்கி கொள்ளப்படாத நிலையில் கடந்தஆண்டு சுதந்திரதின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் எதுவுமி ன்றி, கொடியேற்றம் அணி வகுப்பு, தியாகிகள் கவுரவி ப்பு,அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிகளோடு முடிவடைந்தன.

அதேபோல் நடப்பாண்டு குடியரசு தின விழாவும் பள்ளி கல்லூரிகள் இன்னமும் முழுமையாக திறக்கப்படா த நிலையில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் எதுவுமின்றி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது குறிப்பாக கொடியேற்றம், போலீசார் அணி வகுப்பு, தியாகிகள் கவுரவிப்பு, சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகியவற்றோடு நிறைவடைய உள்ளது.இதனையொட்டி குடியரசு தினவிழா நடைபெறக்கூ டிய பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் தொடங் கியுள்ளது. இதற்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் டோசர் எந்திரங்கள் கொ ண்டு பொருட்களை அகற்றும் பணிகள் நடந்து வருகி றது.

இதில் நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் கள் கலந்து கொண்டு மைதானம் முழுக்க பொருட்க ளை அகற்றித் தூய்மை படுத்தி வருகின்றனர். பள்ளமாக உள்ள இடங்களில் மண் கொட்டி நிரவி சமன்படுத்தி வருகின்றனர். சிறப்பு விருந்தினர்கள் அரசு ஊழியர்கள் அமர தக்க வகையில் விழா மேடையின் இருபுறமும் கேலரிகளுக்கு முன்புறமாக பந்தல் அமைக்கும் பணி நடந் து வருகிறது. இன்று முதல் நகராட்சி துப்புரவு பணியா ளர்கள் களமிறக்கப்பட்டு தூய்மைபணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: