இலங்கை கடற்படை தொடர் அத்துமீறல்: சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சந்திப்பு.!!!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சந்தித்து பேசினார். புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 18ம் தேதி மீன் பிடிப்பதற்காக  தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜேசுவின் விசைப்படகில் மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்த மீனவர்கள் 19ம் தேதியே கரைக்கு திரும்பி இருக்க வேண்டும்.  அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என்று அறிந்தவுடன், எனது உத்தரவின்பேரில் ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடும் பணி நடந்தது.

இருப்பினும், 4 மீனவர்களும் இலங்கை கடற்படையின் தாக்குதலினால் இறந்துவிட்டதாக மீனவர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இலங்கை கடற்படையின் இச்செயலுக்கு முதல்வர் எடப்பாடி, பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.கஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில், சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மீன் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, இலங்கை  கடற்படையின் தொடர் அத்துமீறல் குறித்து முக்கியமாக விவாதித்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றதாக புகார் எழுந்துள்ள நிலையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்  முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: