டெல்லி மக்கள் தொகையில் 50 சதவீதம் கொரோனா பரிசோதனை 1 கோடியை தாண்டியது: வரலாற்று சாதனை என கெஜ்ரிவால் டிவிட்

புதுடெல்லி: கொரோனா வைரஸைக் கண்டறிவதற்காக டெல்லியில் நடத்தப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாகவும், இது ஒரு ”புதிய சாதனை” என்றும் முதல்வர் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலைக்கு பின்னர் தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு அதிக அளவில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தும் முக்கிய காரண்ங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

டெல்லியில் கோவிட் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளின் எண்ணிக்கை இதுவரை ஒரு கோடியை தாண்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 10 லட்சம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 5.29 லட்சத்திற்கும் அதிகமாகும். அதே நேரத்தில் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,00,59,193 ஐ கடந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுபற்றி கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்து ட்விட்டரில் தகவல் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘டெல்லி நகரம் வெற்றிகரமாக தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது”என பதிவிட்டுள்ளார். மற்றொரு ட்விட்டில், ”டெல்லி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. டெல்லியில் இதுவரை1 கோடி கொரோனா பரிசோதனைகளை நாங்கள் மேற்கொண்டு முடித்துள்ளோம். இது டெல்லி மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கு இணையானது. பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையின் எண்ணிக்கையை அதிகரித்தன் மூலம் தொற்று பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளோம்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories: