திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, வழக்கறிஞர் ஒருவர் 5 அடியில் பித்தளை வேல் பரிசாக வழங்கினார். திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அருகில், நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் செங்கல்பட்டில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள சக்தி வினாயகர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதேபோன்று பெரும்புதூரில் ராமானுஜர் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். ஆனால் திருப்போரூர் பிரசாரத்தின்போது புகழ் பெற்ற கந்தசுவாமி கோயிலுக்கு அருகிலேயே பிரசாரம் செய்தபோது, அக்கோயிலுக்கு செல்லவில்லை.