கழிவுகளிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்திற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற வீடியோ கான்பரன்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் மற்றும் வடக்கு மாநகராட்சி மேயர் ஜெய் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆன்லைன் மூமல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை வடக்கு மாநகராட்சியின் எல்லைக்குள்ள உள்ள எந்தவொரு பொருத்தமான இடத்திலும் நிறுவவதற்காக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரதான், \\”இந்த திட்டம் நகரத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும் என்றார். மேலும், தெற்கு டெல்லியிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்திரப்பிரஸ்தா கேஸ் லிமிடெட் இணைந்து செயல்படுகின்றன என்பதையும் அப்போது பிரதான் சுட்டிக்காட்டினார். துணைநிலை ஆளுநர் பைஜால் பேசுகையில், டெல்லியில் கழிவுகள் மேலாண்மை ஒரு பெரிய சவால் என்றும், இந்த கழிவு-ஆற்றல் ஆலை நிறுவப்படுவது குப்பை மேலாண்மை செயல்பாட்டில் ஒரு பெரிய பிரச்சினையை தீர்க்க உதவும் என்றும் கூறினார். மேயர் ஜெய் பிரகாஷ் கூறுகையில்,இந்த திட்டத்தை நிறுவுவதன் மூலம், வடக்கு மாநகராட்சி தனது அதிகார எல்லைக்குள் சேகரிக்கப்பட்ட அனைத்து குப்பைகளையும் அப்புறப்படுத்தவும், தற்போதுள்ள பிற வசதிகளுடன் அப்புறப்படுத்தி திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றார்.

Related Stories: