கொரோனாவால் ஏற்பட்ட உற்பத்தி இழப்பே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்

புதுடெல்லி:கொரோனா தொற்று பரவலால் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ள நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், கொரோனா ஊரடங்கு காரணமாக எண்ணெய் வள நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதை குறைத்துள்ளன. சில மாதங்களுக்கு முன் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 35 டாலராக இருந்த நிலையில் தற்போது உற்பத்தி குறைவால் விலை 55 டாலராக அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவிகித அளவுக்கு வெளிநாடுகளையே சார்ந்திருப்பதால் அங்கு ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்கள் இந்தியாவையும் பாதிக்கிறது. இதனால் சூரிய எரிசக்தி உற்பத்தி, மின்சார வாகன பயன்பாடு, பெட்ரோலில் எத்தனால் கலப்பது உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது’ என்றார்.

Related Stories: