மே.வங்கத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் மம்தாவை எதிர்த்து சுவேந்து போட்டி: சபாஷ் சரியான போட்டி

நந்திகிராம்: மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி பானர்ஜி அறிவித்த நிலையில் தானும் அங்கே போட்டியிட்டு மம்தாவை தோற்கடிப்பேன் என பாஜவுக்கு சென்ற சுவேந்து அதிகாரி உறுதியாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் பிரசாரம் களைக்கட்டியுள்ளது. மேலும் முக்கிய தலைவர்கள் பலர் பிற கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில் நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது அவர், ‘‘நான் நந்திகிராம் தொகுதியில் இம்முறை போட்டியிடப் போகிறேன். இதே தொகுதியில் 2011ல் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி சுவேந்து அதிகாரி பாஜவுக்கு தாவிட்டார். அவருக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து இங்கு போட்டியிடுவாரா?’’ என சவால் விட்டார். அடுத்த சில மணி நேரத்தில் இதை ஏற்றுக்கொண்டு நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கு தயார் என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘‘மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெறுவேன்” என்றார். இதனால் மேற்கு வங்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Related Stories: