தமிழ்நாட்டில் வருங்காலத்தில் பாஜ பெரிய சக்தியாக வரும்: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு

சென்னை:பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பாஜ தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வந்தார். அதன்பின்னர் சென்னை மதுரவாயலில் நடைபெற்ற பாஜவின் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார் நட்டா.  அப்போது தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் ஜே.பி. நட்டா. பின்னர் அவர் பேசுகைளில், நம்ம ஊரு பொங்கல் என்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ்நாடு ‘பக்தி’ பிரதேசமாகும். மதத் தலைவர்கள் மற்றும் புனிதர்களால் மத உணர்வுகள் பாதுகாக்கப்பட்ட ஒரு இடம் இது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற ஆன்மிகவாதிகள் பக்திக்கும் ஆன்மிகத்திற்கும் நிறைய பங்களிப்பை தந்துள்ளனர்.

உலகிலேயே மிகப் பழமையான மொழி தமிழ். மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டிற்கு அதிக பலன் கிடைத்துள்ளது. கொரோனா காலத்திலும் சிறப்பான பங்களிப்பை மத்திய அரசு செய்துள்ளது.  தமிழ்நாட்டில் வரும் காலத்தில் பாஜகதான்; அதனால்தான் பல்வேறு துறையினர் பாஜகவில் இணைகிறார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர்கள், சி.டி.ரவி, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், கரு.நாகராஜன், நடிகை குஷ்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Related Stories: