மாங்காடு அருகே பரிதாபம்: கால்களை உடைத்து நாய் கொடூர கொலை: 3 பேருக்கு வலை

சென்னை: மாங்காடு அருகே கம்பெனிக்குள் நுழைந்ததாக கூறி தெருநாயை கொடூரமாக அடித்து கொன்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.  மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்த சத்யராஜ் (30), தினசரி தெரு நாய்களுக்கு உணவு வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் சாப்பாடு வைத்தபோது, ஒரு நாய் வரவில்லை. அதை தேடியபோது, அங்குள்ள தனியார் நிறுவனத்திற்குள் 2 கால்கள் உடைக்கப்பட்டும், முகத்தில் ரத்தம் வழிந்த நிலையிலும் காணப்பட்டது.  இதுபற்றி விசாரித்தபோது, கம்பெனிக்குள் நாய் புகுந்ததால், அங்கிருந்த ராஜேஷ், கீர்த்தி மற்றும் ரஞ்சித் ஆகியோர் இரும்பு ராடால் அடித்தது தெரியவந்தது.

படுகாயமடைந்த நாயை, சத்யராஜ்  மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நாய் பரிதாபமாக இறந்தது. இதையடுத்து நாயை அடித்து கொன்ற 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்யராஜ் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>