கஞ்சா கடத்தியவர் கைது

பூந்தமல்லி;  கஞ்சா கடத்திவந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை வளசரவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இரவு நேரங்களில் கஞ்சா சப்ளை செய்வதாக வளசரவாக்கம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி வந்த லோடு ஆட்டோவை மடக்கி சோதனை நடத்தினர்.  அதில் இருந்தவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். விசாரணையில் மதுரவாயலை சேர்ந்தவர் முருகன் (24) என்பதும் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும், பைக்கில் கஞ்சா எடுத்து வந்தால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என்பதால் உறவினரின் லோடு ஆட்டோவில் கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>