திருவள்ளூரில் கரும்பு, சாட்டை, கயிறு, மேளம் களை கட்டியது பொங்கல் பொருள் விற்பனை: விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

திருவள்ளூர்: பொங்கல் பண்டிகை வழிபாட்டின்போது மஞ்சள் கொத்து, தித்திக்கும் செங்கரும்பு, காய்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள் அனைத்தும் வைத்து பூஜை செய்வர். இதையொட்டி, ஒரு ஜோடி செங்கரும்பு ரூ.80 முதல் ரூ.100 வரை நேற்று விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மஞ்சள் கொத்து சிறியது ஒரு ஜோடி ரூ.30, பெரியது ரூ.50, கலர் கோலப்பொடி கிலோ ரூ.50, 50 கிராம் பாக்கெட் ரூ.10க்கும் விற்றது. பொங்கலுக்கு முக்கிய உபகரணமான மண் பானை குறைந்தபட்சம் ரூ.80 முதல் அதிகபட்சம் ரூ.200 வரை விற்கப்பட்டது.

பொங்கல் பொருட்களான வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, நெய், பச்சரிசி, பாசிபருப்பு போன்றவை வாங்க மளிகை கடையில் மக்கள் குவிந்தனர். இவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும், ஒரு முழம் மல்லிகை ரூ.50க்கு விற்கப்பட்டது. சாமந்திப்பூ, கனகாம்பரம், முல்லைப்பூ என அனைத்து பூக்களும் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு, 6 வகை காய்கறிகளை சேர்த்து கதம்பமாக செய்வது வழக்கம். இந்த காய்கறிகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Related Stories: