தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்த ரூ.621 கோடி செலவாகும் : தமிழக தேர்தல் அதிகாரி தகவல்!!

சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்காக தமிழக அரசிடம் ரூ.621 கோடி கேட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். இதனால் தேர்தல் பரப்புரை பணிகளில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கு ரூ.621 கோடி செலவாகும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கொரோனா காலம் என்பதால் தேர்தல் செலவு அதிகரிக்கக் கூடும். இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க,ரூ.621 கோடி செலவாகும். இந்த தொகையை தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். பீகாரை போல தமிழகத்தில் தேர்தலை நடத்த அறிவுறித்தியுள்ளோம்.கொரோனா தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து தமிழக அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும்,என்று கூறியுள்ளார்.

Related Stories: