தொழிற்சாலை பகுதியில் உள்ள கட்டிடங்களின் பிற தளங்களுக்கும் தொழிற்சாலை உரிமம் வழங்க முடிவு: தெற்கு மாநகராட்சி நடவடிக்கை

புதுடெல்லி: தெற்கு மாநகராட்சியின் மாமன்ற தலைவர் நரேந்திர சாவ்லா கூறியதாவது:டெல்லியில் உள்ள தொழில்பேட்டை பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலை கட்டிடங்களில் தரைத்தளத்திற்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் மேல் உள்ள தளங்களுக்கு எந்த கொள்கையும் அனுமதிக்காததால் உரிமம் வழங்கப்படுவதில்லை என்றாலும், வளாகத்தின் உரிமையாளர்கள் முதல் அல்லது இரண்டாவது  அல்லது அனைத்து தளங்களையும் தொழில்துறை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வரும் பல  நிகழ்வுகள் உள்ளன.  இது ஏற்கனவே உள்ள விதிமுறைகளுக்கு புறம்பானது என்பதோடு, அப்பால் வளாகத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துதாக உள்ளது.

எனவே,  அனைத்து தளங்களுக்கும் தொழிற்சாலை உரிமம் வழங்கும் திட்டத்திற்கு தெற்கு மாநகராட்சி ஒப்புதல்  அளித்துள்ளது. மேலும், பிற தளங்களுக்கு தொழிற்சாலை உரிமத்தை வழங்க  மாநகராட்சிக்கு தடை விதிக்க எந்தவொரு வெளிப்படையான சட்டமும் இல்லை. இவ்வாறு கூறினார். இதனிடையே, இந்த நடவடிக்கை தொழில்துறை துறையில் வேலை  வாய்ப்புகளை உருவாக்க உதவுவதோடு, கிடைக்கக்கூடிய வளங்களின் உற்பத்தித்திறனை  உகந்த நிலைக்கு உயர்த்தவும் உதவும் என்று நிலைக்குழு தலைவர் ராஜ்துத் கெலாட் தெரிவித்தார்.

Related Stories: