சமத்துவ பொங்கல் விழாவையொட்டி ரேக்ளா போட்டியில் சீறிப் பாய்ந்த குதிரைகள்: ஏராளமானோர் கண்டுகளிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பொருந்தவாக்கம் பகுதியில், சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த, புதிய மெட்ராஸ் ரேக்ளாஸ், சென்னை ரேக்ளா, திருவள்ளூர் மாவட்ட ரேக்ளா கிளப்பினர் ஆகியோர் இணைந்து நடத்தினர். இதில், சென்னை, சேலம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குதிரைகள், வண்டிகள்  பங்கேற்றன. இந்த குதிரை பந்தயம் மூன்று பிரிவுகளாக நடைப்பெற்றது.

5 கிலோ மீட்டர், 8 கிலோ மீட்டர், 12 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக, செங்கல்பட்டு-திருப்போரூர் சாலையில்  நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற குதிரைகளுக்கு சுழல் கோப்பைகள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு பகுதியில் முதல்முறையாக நடந்த இந்த போட்டிகளை பார்க்க பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: