நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதான புரோக்கரிடம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி விசாரணை

மதுரை: தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த 2019ல், நீட் தேர்வில்  ஆள் மாறாட்டம் செய்ததாக மாணவர் மற்றும் அவரது தந்தை கைதாயினர். தொடர்ந்து பல மாணவர்கள், பெற்றோர், புரோக்கர்கள் கைதாயினர். முக்கிய புரோக்கரான கேரளாவை சேர்ந்த ரஷீத், கடந்த 7ம்தேதி  தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.  பெரியகுளம் சிறையில் அடைக்கப்பட்ட ரஷீத்தை, நேற்று முன்தினம் 3 நாள் காவலில் எடுத்த தேனி சிபிசிஐடி போலீசார், மதுரை அலுவலகத்தில் வைத்து நேற்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விசாரணை நடத்தினர். இதில், போலீசார்  கேட்ட  கேள்விகளும், அதற்கு ரஷீத் அளித்த பதில்களும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் ரஷீத் தெரிவித்த தகவலின் அடிப்படையில்,  மேலும் பல  சீனியர் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் சிக்குவர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: