நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அண்ணன் மகள் சித்ரா மறைவு

கொல்கத்தா: சுதந்திர போராட்டத் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோசின் அண்ணன் சரத் சந்திர போஸ். அவருடைய மகள் சித்ரா போஸ் (90). பிரபல கல்வியாளரான இவர், கொல்கத்தாவில் உள்ள லேடி பிராபோர்ன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். அக்கல்லூரியின் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக நீண்ட காலம் இருந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் அவர்  உயிரிழந்ததாக, அவரது மருமகனும் பாஜ மூத்த தலைவர்களில் ஒருவருமான சந்திர குமார் கோஷ் தெரிவித்துள்ளார். சித்ரா கோஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கல்வி, சமூக சேவையில் முன்னோடி பங்களிப்புகளை வழங்கியவர் சித்ரா கோஷ் . அவருடன் கலந்துரையாடியது எனக்கு நினைவில் இருக்கிறது. நேதாஜி குறித்த கோப்புக்களை வகைப்படுத்துதலின்போது பல விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளோம். அவரது திடீர் மறைவால் வருத்தமுற்றேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி,’ என கூறியுள்ளார்.

Related Stories: