தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கலாம்: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்களும், மாற்று திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்திய தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், ‘வெளிநாடுவாழ் இந்தியர்களை ஆன்லைனில் வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பும் இணைப்பில் (லிங்க்) அவர்கள் எந்த நாட்டில் இருந்தும் தங்களின் வாக்கை செலுத்தலாம்.

இது குறித்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்,’ என கடந்த மாதம் 23ம் தேதி, மத்திய அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இந்த பரிந்துரையை வெளியுறவு அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க அனுமதி கோரும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை ஏற்கப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளை அது உடனடியாக மேற்கொள்ளலாம். இருப்பினும், இது தொடர்பான பிற அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, நடைமுறைப்படுத்த வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: