மழையால் சேறும் சகதியுமாக மாறியது சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டம்

காரியாபட்டி : காரியாபட்டி அருகே மழையால் சேறும், சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே டி.கடம்பன்குளம் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இங்குள்ள தெருச்சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளது. நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பதம் பார்த்து வருகிறது.

எனவே சாலையை சீரமைக்க ேகாரி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று தெருக்களில் தேங்கிய தண்ணீரில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள் கூறுகையில், ‘‘சேறும் சகதியுமாக உள்ள சாலைகளில் தற்காலிகமாக கிராவல் அடிக்க அனுமதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு வைத்துள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் ஓரிரு நாளில் சாலைகள் சரி செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: