பழநியில் தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் விற்கப்படும் பிரட் வகைகள்-அதிகாரிகள் நடவடிக்கை தேவை

பழநி : பழநியில் தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் பிரட் விற்பனை செய்யப்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பழநி நகரில் ஏராளமான பேக்கரிகள் உள்ளன. இப்பேக்கரிகளில் பிரட், பிஸ்கட், கேக், இனிப்பு மற்றும் கார வகை திண்பண்டங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் பல பேக்கரிகளில் தற்போது காலாவதி மற்றும் தயாரிப்பு தேதி போன்றவை குறிப்பிடப்படுவதில்லை. படிப்பறிவில்லாத கிராம மக்கள், இதனை அறியாமல் வாங்கிச் சென்று சாப்பிடுகின்றனர். இவற்றில் பல காலாவதியான பொருட்கள் என புகார் கிளம்பி உள்ளன.

இதனை வாங்கி உண்ணும் பலருக்கு வயிற்றுப் போக்கு போன்ற தொந்தரவுகள் அதிகளவில் ஏற்படுவதாக தெரிகின்றன. இதுபோல் கேக் வகைகளும் உரிய தேதி குறிப்பிடாமலேயே விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் நலன் கருதி உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் இதுபோன்ற பேக்கரிகளில் ஆய்வு செய்து காலாவதி மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யும் திண்பண்டங்களை பறிமுதல் செய்ய வேண்டும், சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: