அவுரங்காபாத் பெயர் மாற்ற விவகாரம்; சமூகத்தை பிளவுபடுத்த உடன்படமாட்டோம்: சிவசேனா - காங்கிரஸ் கூட்டணியில் மோதல்

மும்பை: அவுரங்காபாத் பெயர் மாற்ற விவகாரத்தில், வெறுப்பு, சமூகத்தை பிளவுபடுத்த உடன்படமாட்டோம் என்று காங்கிரஸ் கூறிவரும் நிலையில், சிவசேனா - காங்கிரஸ் கூட்டணியில் மோதல் வலுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்திற்கு ‘சம்பாஜிநகர்’ என்ற பெயர் மாற்ற சிவசேனா கட்சி கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது. இதுெதாடர்பாக 1995ம் ஆண்டில் அவுரங்காபாத் மாநகராட்சியில் ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரித்து காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாடியதால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.

ஆனால் தற்போது கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரத் கூறுகையில், ‘அவுரங்காபாத்திற்கு சாம்பாஜி என்று பெயர் மாற்றுவது குறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், காங்கிரஸ் கட்சி அதனை வலுவாக எதிர்க்கும். நாங்கள் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்தாலும், இதுபோன்ற திட்டங்களை நிச்சயமாக எதிர்ப்போம். மேலும் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்திலும் பெயர் மாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை,

சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் ஆகியோரை காங்கிரஸ் மதிக்கிறது. பெயர் மாற்றப் பிரச்னை வெறுப்பை பரப்புவதற்கும் சமூகத்தை பிளவுபடுத்துவதற்கும் மட்டுமே பயன்படும்’ என்றார். இதுகுறித்து மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரும், மாநில அமைச்சருமான அசோக் சவான் கூறுகையில், ‘நகரத்தின் பெயரை மாற்றுவது மகாராஷ்டிராவின் கூட்டணி ஆட்சியின் செயல்திட்டத்தில் இல்லை. இங்கு மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த ெகாள்கை, பார்வை உள்ளது. எனவே நாம் அனைவரும் பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் பணியாற்றுவோம்.

பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதில்லை’ என்றார். இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘அவுரங்காபாத் பெயர் மாற்றம் குறித்து, கூட்டணி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னை தீர்க்கப்படும்’ என்றார்.

Related Stories: