முதல்வர் வேட்பாளர் யார்? குஷ்புவும் சொல்லிட்டார்

சென்னை:சென்னையில் நடிகை குஷ்பு நேற்று அளித்த பேட்டி: மத்தியில் உள்ள பாஜ கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. இதனால், தேவையில்லாமல் குழப்பம் வேண்டாம். தேசிய ஜனநாயக கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 4 அல்லது 5 நாட்களில் பாஜ மேலிடம் அறிவிக்கும். தமிழகத்தில் எங்கு தலைமை என்னை போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன். திராவிட இயக்கங்களை தேசிய கட்சிகள் என்னும் கருங்காலிகள் அழிக்க நினைப்பதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அவர் சொன்ன கருங்காலிகள் யார் என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: