வள்ளுவர்புரத்தில் வீணாகும் குடிநீர்: பஞ்.நிர்வாகம் அலட்சியம்

கிருஷ்ணகிரி: பர்கூர்  ஒன்றியம், வள்ளுவர்புரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், குடிநீர் பற்றாக்குறை காரணமாக, வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ், ஒரே இடத்தில் 20 குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில், ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடி தண்ணீர் பிடித்ததால், கொரோனா தொற்று பரவி  வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.

தற்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ், நூற்றுக்கணக்கானோர் தண்ணீர் பிடித்து வருவதால், குடிநீர் வீணாகி சாலைகளில் வழிந்தோடிகிறது. இதை தவிர்க்க, அனைத்து வீடுகளுக்கும் தனித்தனி குடிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: