விரைவில் அட்டவணை வெளியிடப்படும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே குருமந்தூரில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 193 பயனாளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் ஆடுகளை வழங்கினர். பின்னர், அவர் அளித்த பேட்டி: அரசு பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். அதற்காகவே, பெற்றோர்கள் விரும்பி அரசு பள்ளியில் சேர்க்கின்றனர்.  இதை ஊக்கப்படுத்தவே நீட் தேர்வில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்துள்ளது. இதன்மூலம், 405 மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவு செய்துள்ளது. முதல்வர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: