சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு கட்சியில் சேர்ந்த கபிலை உடனடியாக நீக்கியது பாஜ

புதுடெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நடத்தப்பட்ட  போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குஜ்ஜார், பாஜ கட்சியில் சேர்ந்த அடுத்த சில மணி நேரத்தில் நீக்கப்பட்டார். குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லி ஷாகின் பாக் பகுதியில் கடந்த பிப்ரவரியில் பெரியளவில் போராட்டம் நடந்தது. அப்போது, போராட்டத்தில் கபில் குஜ்ஜார் என்ற வாலிபர், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக போலீசார் அவரை பிடித்து சென்றனர். அப்போது ‘இந்தியாவை இந்துக்கள் மட்டுமே ஆள வேண்டும்’ என கோஷமிட்டபடி சென்றார். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கபில் குஜ்ஜார் பாஜ கட்சியில் இணைந்தார். பாஜ உள்ளூர் நிர்வாகி ஒருவர் கபிலுக்கு இனிப்பு ஊட்டி மாலை அணிவித்து கவுரவிப்பதாக வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.  அடுத்த சில மணி நேரத்திலேயே கபிலை கட்சியிலிருந்து நீக்கி பாஜ மேலிடம் அறிவித்தது. கபிலின் கடந்த கால வரலாறு தெரியாமல் அவரை கட்சியில் சேர்த்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories: