சபரிமலையில் 3 பேருக்கு கொரோனா மேல்சாந்தி உட்பட 7 பேர் தனிமை

திருவனந்தபுரம்: சபரிமலையில் மேல்சாந்தியின் 3 உதவியாளர்களுக்கு கொரோனா உறுதியானதால், மேல்சாந்தி உட்பட 7 ேபர் தனிமைப்படுத்தி கொண்டனர். சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகளுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. நேற்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் இன்று முதல் மகரவிளக்கு கால பூஜைகள் துவங்குகிறது. இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்த சோதனையில் சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜின் உதவியாளர்கள் 3 பேருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி உட்பட 7 பேர் தங்களை தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டனர். இதனால், நேற்று மேல்சாந்தி ஜெயராஜ் கோயில் நடை திறக்கவில்லை. தந்திரி கண்டரர் ராஜீவரர் நடை திறந்தார். மேல்சாந்தி இல்லாததால் சிறப்பு பூஜைகளையும் இன்று முதல் தந்திரி நடத்த உள்ளார்.

Related Stories: