டொயோடா கம்பெனி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் 50வது நாளை எட்டியது: ரத்த தானம் செய்து நூதன போராட்டம்

பெங்களூரு: டொயோடா மோட்டார்ஸ் கம்பெனி ஊழியர்கள் 50வது நாளாக நேற்று நிர்வாகத்திற்கு எதிராக ரத்த தானம் செய்ததன் மூலம் நூதன போராட்டம் நடத்தினர். பெங்களூரு அடுத்த பிடதி தொழிற்பேட்டை பகுதியில் இயங்கிவரும் டொயோடா ேமாட்டார்ஸ் கம்பெனி ஊழியர்கள், நிர்வாகத்தின் அடக்கு முறையை கண்டித்து கடந்த மாதம் 9ம் தேதியில் இருந்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். கம்பெனிக்கு எதிரில் உள்ள சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இந்நிலையில் ேபாராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக முதல்வர் எடியூரப்பா, துணைமுதல்வர் அஷ்வத் நாராயண், அமைச்சர்கள் ஜெகதீஷ்ஷெட்டர், சிவராம் ஹெப்பார் ஆகியோர் முன்னிலையில் நான்கு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.

வேலை நிறுத்த போராட்ட காலத்தில் 8 தொழிலாளர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமாகியுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தின் 50வது நாளான நேற்று தொழிலாளர்கள் ரத்த தானம் செய்வதின் மூலம் தங்கள் எதிர்ப்பை நூதன முறையில் தெரிவித்தனர்.  இதனிடையில் டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் கம்பெனி தொழிலாளர்களுக்கு ஆதரவாக தென்மாநில கார் உற்பத்தி தொழிற்சாலை தொழிலாளர் சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: