வாட்ஸ்அப், இன்ஸ்டா, பேஸ்புக்கில் பயன்படுத்த ‘மெட்டா ஏஐ’ இந்தியாவில் அறிமுகம்


புதுடெல்லி: இந்தியாவில் மெட்டா ஏஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாவில் பயனர்கள் படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான மெட்டா ஏஐ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப், மெசஞ்சர் பயனர்கள் மெட்டா ஏஐ சாட்பாட்டை பயன்படுத்த முடியும். இந்த வசதி தற்போது குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்பட்டாலும், வரும் காலங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் நுட்பம் ஏஐ மாடலான லாமா 3 தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை கடந்த ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தேர்தல் நடந்ததால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

The post வாட்ஸ்அப், இன்ஸ்டா, பேஸ்புக்கில் பயன்படுத்த ‘மெட்டா ஏஐ’ இந்தியாவில் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: