வாழைத்தோட்டத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

கூடலூர்: கூடலூர் நகரை ஒட்டிய மேல் கூடலூர், கோக்கால், கெவிபாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உடலில் காயத்துடன் சுற்றித்திரியும்  காட்டு யானை ஒன்று அண்மைகாலமாக அடிக்கடி குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை விளைவித்து வருகிறது. நேற்று  அதிகாலையில் துப்புக்குட்டி பேட்டை பகுதியில் குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள அருகே ராஜா, கீர்த்தி ஆகிய இருவரின் வாழைத்  தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை சுமார் 300க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

குலை தள்ளுவதற்கு வாழை மரங்கள் நெருங்கி வரும் நிலையில் காட்டு யானை புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகள்  இருவரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ‘‘நிலத்தை குத்தகைக்கு எடுத்து வங்கியில் கடன் பெற்று சுமார்  வாழைகளை நட்டு உள்ளோம். எனவே  யானையால் சேதப்படுத்தப்பட்ட வாழைகளுக்கு வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: