கீழ்வேளூர் அருகே வெண்மணி தியாகிகள் 52வது நினைவு தினம்

கீழ்வேளூர்: விவசாய கூலி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டதால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை கலவரமாக மாறியது. அப்போது கீழ வெண்மணியில் விவசாயிகளுக்கு பயந்து ஒரே தெருவை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 44 பேர் ஒரு கூரை வீட்டிற்குள் மறைந்து கொண்டனர். அப்போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டபோது வீட்டிற்குள் மறைந்திருந்த 44 பேரும் தீயில் கருகி இறந்தனர்.

இதையடுத்து 44 பேர் தீயில் கருகி இறந்த வீட்டை நினைவிடமாக மாற்றப்பட்டு ஆண்டு தோறும் டிசம்பர் 25ம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நேற்று 52ம் ஆண்டு வெண்மணி தியாகிகள் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: