திமுக ஆட்சி அமைந்த பிறகு 100 நாள் வேலை திட்டம் 300 நாளாக உயர்த்தப்படும்:துரைமுருகன் அறிவிப்பு

திருப்பத்தூர், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், கசிநாயக்கன்பட்டி மற்றும் திருப்பத்தூர் நகர் பகுதியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

ஜெயலலிதாவுக்குதான் மக்கள் வாக்களித்தனர். அவர் உயிரோடு இல்லாததால் பழனிசாமி அதிர்ஷ்டவசமாக முதல்வர் ஆகிவிட்டார்.

கொரோனா காலத்தில் வேலை இழந்து சிரமப்பட்ட மக்களுக்கு ₹5,000 வழங்க வேண்டும் என திமுக கூறியது. ஆனால், ₹1,000 வழங்கிய அதிமுக அரசு, தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் பொங்கல் பரிசாக கரும்பு, ₹2,500 வழங்குவதாக தெரிவித்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடே வேளாண் சட்டங்களை எதிர்க்கும்போது அதிமுக அரசு ஆதரவு தெரிவிக்கிறது.  திமுக ஆட்சிக்கு வந்த உடன் 100 நாள் வேலை திட்டம் 300 நாட்களாக உயர்த்தப்படும். வரும் தேர்தலில் அதிமுகவை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: