செஞ்சி அருகே ஏரியின் மதகு உடைந்து வெள்ளம்.: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கின

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஏரியின் மதகு உடைந்து வேளாண் நிலத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. உழுதவன் கணக்கு பார்த்தல் உழக்கு கூட மிஞ்சாது என்பவர் இன்றைய விவசாயிகளின் நிலையோ அப்படிதான் இருக்கிறது. செஞ்சியை அடுத்த சென்னனூரில் வனத்துறைக்கு சொந்தமான 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியின் மதகு உடைந்து இரண்டு நாட்களாக தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.

ஏரியில் இருந்து வெளியேறும் நீர் அருகில் உள்ள விவசாய நிலத்துக்குள் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் அறுவடை செய்துவிடலாம் என காத்திருந்த விவசாயிகளுக்கு இது பேரடியாக விழுந்துள்ளது. உடைப்பை சரி செய்ய அதிகாரிகளிடம் முறையிட்டும் மாவட்டம் நிர்வாகமும், வனத்துறையும் நிர்வாக போட்டியால் கண்டும் காணாமலும் உள்ளதாக விவசாயிகளின் குற்றச்சாட்டாகும்.

அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் மணல் மூட்டைகளை கொண்டு உடைப்பை சரி செய்யும் முயற்சியில் கிராமமக்களே ஈடுப்பட்டு வருகினறனர். ஆனாலும் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க முடியாமல் அவர்கள் தவித்து வருகினறனர்.

Related Stories: