அமெரிக்காவில் 120 ஆண்டுகளுக்கு பின் மக்கள் தொகை பெருக்கம் அதல பாதாளத்துக்கு சரிவு: 2019-2020ல் புதிய வரவு 11 லட்சம் மட்டுமே

வாஷிங்டன்: அமெரிக்காவில் மக்கள் தொகை பெருக்கம், கடந்த பல ஆண்டுகளாக அதிகரிக்காமல் இருந்து வந்தது. குடியேற்ற கட்டுப்பாடுகள், கருவுறுதல் குறைதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்காவின் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு  வந்தது. இந்நிலையில், 2019-2020ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த புள்ளி விவரங்களை அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த 120 ஆண்டுகளில் அமெரிக்காவில் மக்கள் தொகை பெருக்கம்  குறைந்த விகிதத்தில் அதிகரித்துள்ளது. ஜூலை 2019 முதல் 2020ம் ஆண்டு ஜூலை வரையிலான கால கட்டத்தில், அமெரிக்க மக்கள் தொகை 0.35 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 11 லட்சம் அதிகமாகும். கடந்த ஜூலை நிலவரப்படி, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 32.9 கோடியாகும்.

கலிபோர்னியா உட்பட 16 மாகாணங்களில் மக்கள் தொகையானது 0.18 சதவீதம் குறைந்து 39 லட்சமாக உள்ளது. கொரோனா தொற்றின் பிரதான மையமாக இருந்த நியூயார்க் நகரம், 1,26,000 பேரை இழந்துள்ளது அல்லது மக்கள் தொகையில் 0.65 சதவீதம் குறைந்துள்ளது.

* இதற்கு முன் எந்த நூற்றாண்டிலும் அமெரிக்காவில் இந்தளவுக்கு மக்கள் தொகை பெருக்க சதவீதம் குறைந்தது கிடையாது.

* கடந்த 1918 - 1919ல் உலகத்தில் ஸ்பேனிஷ் காய்ச்சல் பரவிய காலத்தில் கூட, அமெரிக்காவில் மக்கள் தொைக பெருக்கம் 0.49 சதவீதமாக இருந்தது.

* 2ம் உலகப் போருக்காக பல்லாயிரக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள், வெளிநாடுகளில் இருந்த போதும் கூட இந்த சதவீதத்தை எட்டியது.

Related Stories: