எஸ்சி மாணவர்களின் கல்வி உதவி தொகைக்கு ரூ.59,000 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி: அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 கோடி எஸ்.சி. மாணவர்களின் மேற்படிப்பிற்காக ரூ. 59,000 கோடி கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி எஸ்சி மாணவர்களின் மேற்படிப்பிற்காக ரூ.59,000 கோடி கல்வித் தொகை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், 60 சதவீதமான ரூ.35,534 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்.

எஞ்சிய தொகையை மாநில அரசுகள் மாணவர்களுக்கு வழங்கும்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘‘மத்திய அமைச்சரவை எஸ்சி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அவர்களுக்கு உயர்தர கல்வி கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்படும். உயர்தர மற்றும் மலிவு கல்வியை உறுதி செய்வது எங்கள் அரசாங்கத்தின் முக்கிய மையமாகும்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: