பாஜவுடன் மஜத இணைவதை ஏற்க முடியாது: எம்.எல்.ஏ அன்னதானி தகவல்

மண்டியா: பா.ஜ.வுடன் மஜத கூட்டணி மற்றும்  இணைப்புக்கு என்னுடைய எதிர்ப்பு உள்ளது என்று மஜத எம்.எல்.ஏ. அன்னதானி தெரிவித்தார். மண்டியா மாவட்டம் மளவள்ளி தாலுகா ஹூஸ்கூரு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. அன்னதானி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ. சாதி அடிப்படையில் கட்சியை வளர்த்து வருகிறது. அவர்களின் கொள்கைக்கும் மஜத கொள்கைக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளது.  சில அரசியல் விஷயங்கள் வந்தால் அப்போது கூட்டணி அமைத்துக்கொள்வது தவிர்க்க முடியாத நிலையுள்ளது. அதே போல் அப்போது கூட்டணி அமைக்க ஆதரவு உள்ளது. ஆனால் மஜதவை பா.ஜவுடன் இணைப்பதற்கு என்னுடைய எதிர்ப்பு உள்ளது.

அரசியலில்  நிமிடத்துக்கு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போதுள்ள நிலை இரவு 10 மணிக்கு மேல் என்ன நடக்கும் என்று தெரியாது. அரசியல் என்பது நின்ற தண்ணீர் கிடையாது. மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம்.

எச்.டி.குமாரசாமி மாநில முதல்வராக மறுபடியும் வர வேண்டும் என்று கட்சி எம்.எல்.ஏக்கள் முயற்சித்து வருகின்றனர். இது போன்ற நேரத்தில் பா.ஜவுடன் கட்சியை இணைந்தால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும்.  அதே போல் எம்.எல்.ஏக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு கட்சி உடைந்து விடும். இதனால் மஜதவை எந்த காரணத்துக்கும் பா.ஜவுடன் இணைக்ககூடாது. அப்படி இணைக்க முயற்சித்தால் என்னுடைய எதிர்ப்பு கண்டிப்பாக இருக்கும் என்றார்.

Related Stories: