பிரபஞ்சத்தில் வெளியான சப்தம்... வேற்றுக்கிரகவாசிகள் அனுப்பிய சப்தமா என ஆய்வு

பிரபஞ்சத்தின் ஒரு புறத்திலிருந்து பெறப்பட்ட ரேடியோ சமிக்ஞை ஒலிகள் வேற்றுக்கிரக வாசிகள் அனுப்பிய சப்தமா என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஜேக் டர்னர், பிலிப் ஸர்க்கா மற்றும் ஜீன் மத்தியாஸ் ஆகியோர் வானியல் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது 51 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கிரகத்தில் இருந்து ரேடியோ சமிக்ஞை ஒலிகள் வருவதைக் கண்டறிந்தனர்.

இந்தச் சப்தம் தவ்பூடிஸ் என்ற நட்சத்திர அமைப்பில் இருந்து வெளியாகி இருக்கலாம் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்தப் சப்தம் வேற்றுக்கிரகவாசிகள் அனுப்பியவையா என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>