நாளை மறுநாள் கேரள சட்டசபை சிறப்புக் கூட்டம்; வேளாண் சட்டங்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்ற முடிவு: பினராயி அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு

திருவனந்தபுரம்: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு சட்டம், அத்தியாவசிய பொருள் திருத்த சட்டம் அடங்கிய 3 சட்டங்கள் குறித்து நாளை மறுநாள் கூட உள்ள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் இடதுசாரி  மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் 3 வேளாண் சட்டங்களை நிராகரித்து தீர்மானத்தை நிறைவேற்ற கேரள அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளது. இதற்காக சட்ட நிபுணர்களின் கருத்தையும் கேட்டு வருகிறது.

Related Stories: