ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையில் அதிமுக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் அறிவித்துள்ளார். கூட்டணி வேறு, கொள்கை வேறு; கொள்கை படிதான் நாங்கள் செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார். இயேசு பிறப்பான டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் வகையில் அதிமுக சார்பாக சென்னையில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

இதில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்;  ஜெருசேலத்திற்கு புனிதப் பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி 20,000 லிருந்து 37,000 ஆக உயர்த்தப்படும்” என அறிவித்தார். முன்னதாக தமிழக பாஜக தலைவர் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தெரிவிக்கும் என கூறிய கருத்து சர்ச்சையை ஏர்படுத்திய நிலையில் அது குறித்து பேசிய அவர், “கூட்டணி வேறு கொள்கை வேறு கூட்டணி. கொள்கைப்படிதான் நாங்கள் செயல்படு்வோம். எந்த ஒரு வேருபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருப்பது தமிழகத்திற்கு பெருமை” என்றார்.

Related Stories: