நடிகை சித்ரா தற்கொலை விவகாரம்: உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்: ஹேம்நாத் தந்தை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை, அமைந்தகரையை சேர்ந்தவர் ரவிசந்திரன் (62) வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: என் மகன் பெயர் ேஹம்நாத். அவர் நடிகை சித்ராவை இரு வீட்டார் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 9ம் தேதியன்று சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது தொடர்பாக போலீசார் ஐந்து நாட்களுக்கு பிறகு ஹேம்நாத்தை கைது செய்தனர். இந்நிலையில், பல சமூகவலைதளங்களில் சித்ரா மூன்று ஆண்களை காதலித்ததாகவும், ஏற்கனவே நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றுள்ளதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளது. அவர் மதுப்பழக்கத்திற்கு உள்ளானவர் என்று கூறுகிறார்கள். தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் டேட்டிங்கில் எடுத்த புகைப்படத்தினை வைத்துக் ெகாண்டு மிரட்டியதாகவும், சமூக வலைதளங்களின் மூலம் அரசியல்வாதியுடன் தினமும் தொலைபேசியில் பேசியதாகவும், திருமணம் செய்தால் பல ஆதாரங்களை கொடுத்து திருமணத்தை தடை செய்து அசிங்கப்படுத்துவதாகவும் மிரட்டியதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது.

சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.  மேலும் தற்போது பதிவு திருமணத்தை கொண்டு சித்ராவின் தாயார் புகார் கொடுத்ததாகவும் அதனடிப்படையில் விசாரணை நடக்கிறது. சித்ராவின் தாயாருக்கும் கூட உண்மை நிலவரம் தெரிந்து சித்ராவிற்கு மிரட்டல் மற்றும் பாலியல் மிரட்டல் கொடுத்த அந்த நபர்களுக்கு பயந்து அமைதி காத்து வருவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே உரிய விசாரணை அதிகாரியை நியமித்து வெளிப்படையான விசாரணை செய்து உண்மை நிலையினை வெளிகொண்டு வந்து சரியான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

Related Stories: