தனியாரிடம் மின்வாரிய பணி டிடிவி.தினகரன் கண்டனம்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாடு மின்சார வாரியத்தில்  ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப முயற்சிக்கும் பழனிசாமி அரசின் நடவடிக்கை கடுமையான கண்டனத்திற்குரியது.  இப்படியே போனால் மின்வாரியத்தை மொத்தமாக  தனியாருக்கு தாரை வார்த்துவிடுவார்களோ என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. எனவே, மின்பராமரிப்புப் பணியை டெண்டர் மூலம் தனியாரிடம் ஒப்படைத்து, அந்தப் பணிகளுக்கு அவர்கள் வழியாக ஊழியர்கள் நியமிப்பதைக் கைவிட  வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: