தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்: பேராசிரியர் அன்பழகனின் வாடாத புகழ் போற்றி திமுகவை வெற்றி பாதையில் இட்டுச்செல்வோம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “எனக்கு உயிரும் உணர்வும் தந்தவர் கலைஞர். எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர்’ என்ற அடிப்படையில் பேராசிரியரின் பிறந்தநாள் விழாவில், உங்களில் ஒருவனான நான், கல்வி உதவித் தொகையினை வழங்கி  உரையாற்றுகிறேன்.  இந்தியாவுக்கே வழிகாட்டும் சுயமரியாதை-சமூக நீதி - மாநில சுயாட்சி உள்ளிட்ட கொள்கைகளின் தாயகமாக விளங்கும் திராவிட இயக்கத்தின் தொட்டிலான தமிழகத்தில், முக்கால் நூற்றாண்டு கால வரலாற்றுப்  பயணத்தை நெருங்கும் திமுக, நூற்றாண்டு கடந்து தொடர்ந்து பயணித்திட உங்களில் ஒருவனான நான் எந்நாளும் முன்னிற்பேன். அதற்கான கூடுதல் வலிமை தரும் நாளாக பேராசிரியர் பிறந்தநாளை முன்னெடுப்போம்.

பேராசிரியரின் வாடாத  புகழ்  போற்றி-அவர் ஏந்திய திராவிடக் கொள்கை எனும் லட்சியச் சுடர் அணையாமல் காத்து- திமுகவை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வோம்.  திமுக, தனது தேர்தல் பரப்புரையின் அடுத்த கட்டத்தை  டிசம்பர் 20ம் நாள் தொடங்குகிறது.  நாம் கவனமாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், வெற்றி இலக்கை நோக்கிய வீறு குன்றாத அடிகள். கவனம் சிதறாமல் களப் பணியாற்றுவோம்.

Related Stories: