பொங்கல் கருணைக்கொடை கேட்டால்கோயில்களில் வருமானம் இல்லை என்பதா?: 20 ஆயிரம் ஊழியர்கள் வேதனை

சென்னை: கோயில் பூசாரிகள் சங்கம் சார்பில் அறநிலயத்துறை ஆணையர் பிரபாகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வருமானம் இல்லாத கோயில்களுக்கு அலுவலர்களை நியமனம் செய்து அவர்களுக்கு ஊதியம் மற்றும் இதரபடியை வழங்கி வருகிறது. ஆனால், பூசாரிகளுக்கு கருணை கொடை கேட்டால் வருமானம் இல்லை என கூறி வருவது வருத்தத்தை அளிக்கிறது.

மாநிலம் முழுவதும் பெரிய கோயிலுக்கு ஆண்டுதோறும் பல கோடி வருவாய் இருந்தும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் பணியாற்றும் பூசாரிகளுக்கு கருணை கொடை வழங்க மறுப்பது அநீதியாகும். இந்தாண்டாவது பொங்கல் கருணை கொடை, ஆணையர் பொது நல நிதியில் இருந்தோ அல்லது நிதி வசதி உள்ள கோயிலில்களில் இருந்து ரூ.1000 வழங்குவதை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி அனைவருக்கும் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: