வடக்கு, கிழக்கு மாநகராட்சி டாக்டர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தை 2 வாரத்தில் வழங்க உத்தரவு: ஐகோர்ட் அதிரடி

புதுடெல்லி: வடக்கு, கிழக்கு டெல்லி மாநகராட்சி டாக்டர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தை இரண்டு வாரத்தில் வழங்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு பிறகு டெல்லி மாநகராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சரிவர சம்பளம் வழங்கப்படவில்லை. இதுபற்றி இந்திய மருத்துவ சங்கத்தினர் நீதிமன்றத்தை நாடி ஒவ்வொரு முறையும் நிவாரணம் பெற வேண்டியது உள்ளது. இதே போல் அக்டோபர் மாத சம்பளத்தை கேட்டு ஐகோர்ட்டில் ஐஎம்ஏ அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது கிழக்கு மற்றும் வடக்கு டெல்லி மாநகராட்சியில் பணியாற்றும் டாக்டர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் டாக்டர்களுக்கு சம்பளம் வழங்கும் விவகாரத்தில் இரண்டு மாநகராட்சிகள் மற்றும் டெல்லி அரசும் தங்கள் பதிலை அறிக்கையாக தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: