கொரோனா பணியில் 8 மாதமாக உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி: கடந்த 8 மாதங்களாக கொரோனா பணியில் ஈடுபட்டு இருக்கும் மருத்துவர்களுக்கு ஓய்வு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் கடந்த 8 மாதங்களாக ஒய்வின்றி வேலை செய்து வருகின்றனர். தொடர்ச்சியான பணியின் காரணமாக அவர்களின் மன ஆரோக்கியம்  பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர்எஸ் ரெட்டி மற்றும் எம்ஆர் ஷா ஆகியோர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வானது, ‘கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை  அளித்தல் மற்றும் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலை கண்ணியமாக கையாளுவது உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு பணியில் இருந்து சற்று ஓய்வு கொடுக்கப்பட வேண்டும்.

அவர்கள் கடந்த 8  மாதங்களாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சற்று இடைவேளை கொடுப்பது குறித்து சிந்தியுங்கள். இதுபோன்ற நிலை அவர்களுக்கு வேதனையை தரும். மேலும், அவர்கள் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே,  மருத்துவர்களுக்கு இடைவேளை கொடுப்பது குறித்த பரிந்துரைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்,’ என கூறியுள்ளது. அப்போது, ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,  கொரோன நோய் தொற்று சுகாதார பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இடைவேளை வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் ஆலோசனைனை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று  உறுதியளித்தார்.

Related Stories: