கொரோனா தடுப்பூசி போட முன்பதிவு கட்டாயம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசி பெற முன்பதிவு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதை அடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசிகளை விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தியாவில் 3 விதமான மருந்துகள் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளன. இந்நிலையில் தடுப்பூசிகள் கிடைத்ததும், அவற்றை மக்களுக்கு எப்படி வழங்குவது என்பது தொடர்பான ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்கனவே தொடங்கி விட்டது. தடுப்பூசிகளை பாதுகாக்க குளிர்பதன வசதி கொண்ட கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு தடுப்பூசிகளை கொண்டு செல்ல குளிர்சாதன வசதி கொண்ட செல்ல குளிர்சாதன வசதி கொண்ட வாகனங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எந்தெந்த பிரிவினருக்கு முதல் கட்டத்தில் தடுப்பூசி வழங்கப்படும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என முன்கள பணியாளர்களுக்கு முதலில் வழங்கப்படும். பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் கட்டத்தில் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதை அடுத்து இந்த தடுப்பூசியை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அண்மையில் வகுத்துள்ளது.

இதன் படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஒரு நாளில் அதிகபட்சம் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி வழங்க வேண்டும். இதற்காக அமைக்கப்படும் மையங்களில் 5 ஊழியர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அங்குள்ள வசதிகளுக்கு ஏற்ப கூடுதலாக ஒரு பணியாளர் இருக்கலாம். தடுப்பூசி பெற்றவர்களை 30 நிமிடங்கள் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ன. தடுப்பூசி போடும் போது ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். தடுப்பூசி பெற விரும்புவோர் மத்திய அரசு உருவாக்கியுள்ள டிஜிட்டல் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி மையங்களில் யாரும் முன்பதிவு செய்ய முடியாது. முன்பதிவு செய்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் அவசியம். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: