சர்வதேச அளவில் பயனர்கள் அவதி கூகுள் சேவை திடீர் முடக்கம்

வாஷிங்டன்: உலகின் முழுவதும் யூடியூப், ஜிமெயில், ப்ளே ஸ்டோர் உள்ளிட்டவை முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் நேற்று மாலை திடீரென கூகுள் சேவைகள் முடங்கின. யூடியூப், ஜிமெயில், ப்ளே ஸ்டோர் போன்றவை செயல்படவில்லை. இதனால் சர்வதேச அளவில் பயனர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்நிலையில் பிரச்னைகளை சரிசெய்து வருவதாக கூகுள் விளக்கமளித்த நிலையில், சில நிமிடங்களிலேயே யூடியூப் செயல்படத் தொடங்கியது. பின்னர் சுமார் அரைமணி நேரத்திற்கு பிறகு ஜிமெயில் உள்ளிட்டவை மீண்டும் செயல்பட தொடங்கின. கடந்த ஆகஸ்டிலும் கூகுள் இதேபோன்ற செயலிழப்பை எதிர்கொண்டது. சுமார் இரண்டு மணிநேரங்களுக்கு பின் இது சரிசெய்யப்பட்டது. இதற்காக காரணத்தை இப்போது வரை கூகுள் குறிப்பிடவில்லை.

Related Stories: