கும்மிடிப்பூண்டி அருகே திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.ஆர்.டி.உதயசூரியன் வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் கே.வி.லோகேஷ், ஜெ.மோகன்பாபு, வி.ஆனந்தபாபு, ஒன்றிய அமைப்பாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் பகலவன், கதிரவன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், கும்மிடிப்பூண்டி, ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் பாலுமகேந்திரா, மேற்கு ஒன்றிய அமைப்பாளர் சந்திரமோகன், துணை அமைப்பாளர்கள் மைக்கல், ராஜ்குமார், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளைஞரணி ஒன்றிய நகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்ற நிலையில் இளைஞரணியின் கட்சி செயல்பாடு, 2021 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் திமுக வெற்றி பெற பாடுபடவேண்டும், இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் குறித்து டி.ஜெ.கோவிந்தராஜன் ஆலோசனைகள் வழங்கினார்.

Related Stories: